ஆவர்த்தண அட்டவணையில் புதிதாக இரண்டு மூலகங்களை சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய மூலகங்களை இணைப்பது தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக பரிசீலனை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த புதிய வகை இரண்டு மூலகங்களுக்கும் இதுவரை காலமும் சரியாகப் பெயரிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூலகங்கள் இரண்டுமே உச்சளவு கதிரியக்க சிதைவுடையவை எனவும், அணு
மூலங்களில் மிக விரைவில் கரைந்துவிடக் கூடியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது
தூய மற்றும் பிரயோக இரசாயனவியல் சஞ்சிகையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அணு மூலக்கூறுகளின் கட்டமைப்பின் அடிப்படையில் இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தூய மற்றும் பிரயோக இரசாயனவியல் ஒன்றியம் மற்றும் சர்வதேச தூய
மற்றும் பிரயோக பௌதீகவியல் ஒன்றியம் ஆகியவற்றினால் குறித்த மூலகங்கள் பற்றி
ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் ஆவர்த்தண அட்டவணையில் 114
மூலகங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்ததுடன் தற்போது இந்த எண்ணிக்கை
116 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வகை மூலகங்களுக்கு தற்காலிகமாக அன்யுன்குடியம் (ununquadium) மற்றும் அன்யுனெக்ஸியம் (ununhexium) என பெயரிடப்பட்டுள்ளது.
ரஸ்ய மற்றும் அமெரிக்க விஞ்ஞான ஆய்வாளர்களினால் இந்த புதிய வகை மூலகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக