கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டாயம் அவசியமானது முயற்சி ஆகும்.
முயற்சியின் மூலம் திறமையை விருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை
பெற்றோர்கள் மற்றும்ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.
மிக முக்கியமாக, தமது கல்வி நிலையிலிருந்து பிக்தங்கிய நிலையில் அல்லது
கல்வி நடவடிக்கைகளில் சிரமத்தை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கு முயற்சியின்
மூலமாக எதனையும் சாதிக்க முடியும் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும்.தங்களிடம் காணப்படும் திறமைகளை அடையாளம் காணவும் அதன் மூலம் நன்மை அடையவும் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். திறமை என்பது நிலையானது அல்ல அதனை கிரமமான முறையில் அதிகரிக்க முடியும் என்பதனை உணர்த்த வேண்டும். முயற்சியை அதிகரிப்பதன் மூலம் ஆற்றலையும், இயலுமையையும் விருத்தி செய்ய முடியும் என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
கற்றலில் சிரமத்தை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கு பாடசாலையில் இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. ஏனைய மாணவர்களுடன் அவர்களது திறமையை ஒப்பீடு செய்யவும் கூடாது. பெறுபேற்றின் அடிப்படையில் அவர்களை ஊக்குவிக்காது கற்றல் நடவடிக்கைகளை இலகுபடுத்தக் கூடிய உத்திகளை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முயற்சியினால் தமது நடத்தைகளை கட்டுப்படுத்த முடியும் என்பதனை மாணவர்கள் உணரக் கூடிய வகையில் அவர்களை வழிநடத்த வேண்டும். கற்றல் நடவடிக்கைகளுக்கு தாமே பொறுப்பு என்பதனை உணர்த்த வேண்டும். உதாரணமாக ஓர் விடயத்தில் தோல்வியடைந்த அல்லது குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுக்கொள்ள மாணவ, மாணவியருக்கு வேறும் வழியில் இந்த வினாக்களுக்கு விடையளித்தால் வெற்றியீட்ட முடியும் என விளங்கப்படுத்தல்.
கற்றல் உத்திகள் மற்றும் முயற்சியின் அவசியத்தை வலியுறுத்தல். முயற்சி மற்றும் கற்றல் தந்திரோபயங்களைப் பயன்படுத்தி கல்வி கற்கும் மாணவ மாணவியர் பாடசாலை மற்றும் வாழ்க்கைப் பெறுபெறுகளுக்கு தாமே பொறுப்பு என்பதனை உணர்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக