வெள்ளி, 14 அக்டோபர், 2011

அயோத்தி தீர்ப்பு என்ற அயோக்கியத்தனம்

அயோத்தி தீர்ப்பு என்ற பெயரில் ஒரு பெரிய அயோக்கியத்தனம் இன்று நடைபெற இருக்கிறது. மக்களின் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல்
இருக்கிறோம். சாமிக்கு கோயில் தேவையா? இந்த நிலம் எந்த சாமிக்கு சொந்தம் என்று ஒரு கோமாளித்தனம். கோயில்களைக்கட்டுவதும் இடிப்பதும் வரலாறு. இங்கிலாந்து மன்னன் ஒருவன் கத்தோலிக்கக் கோயில்களை தீயிட்டுக் கொளுத்தினான். கத்தோலிக்கக்குருமார்களை சிறையில் அடைத்தான். புத்த கோயில்கள் எல்லாம் இடிக்கப்பட்ட வரலாறும் இந்தியாவில் உண்டு. இராஜராஜ சோழன் இலங்கை அனுராதபுரத்தை தாக்கி அழித்தபோது புத்த விகாரைகளை தரைமட்டம் ஆக்கினான் என்ற வரலாற்றுக்குறிப்பும் உண்டு. இப்படி இடிப்பதும் கட்டுவதுமான வரலாறு போய் இப்போ தீர்ப்பாம். தீர்ப்பை எழுவதும் நாம் தானே. போங்கய்யா போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க.

கருத்துகள் இல்லை: