செவ்வாய், 21 ஜூன், 2011

விக்கிலீக்சும் (விக்கிக்கசிவுகள்) அதன் இன்றைய தேவைகளும்.

விக்கிலீக்ஸ் (Wikileaks) அல்லது விக்கிகசிவுகள் எனப் பொருள்படும் இவ்விணயத்தளமானது ஜூலியன் பவுல் அசான்ச் என்பவரால் 2006 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இது சர்வேதேசரீதியாக  நாடுகள் அரசாங்கங்கள் மற்றும் சமயம் ரீதியான இரகசியங்கள் வெளிவராத உண்மைகள் போன்றவற்றை வெளிக்கொண்டுவரும் ஒரு  இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படுகின்றது. இது நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கும் வெளிச்சத்துக்கும் கொண்டு வரும் சர்வதேச புகழ்வாய்ந்த இணையத்தளமாகும். பல அரச சமய நிறுவனங்கள் எப்போது தங்களைப்பற்றிய இரகசிய செய்திகளை இவ்விகிலீக்ஸ் வெளியிடுமோ என்று அச்சத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.  


விகிலீக்ஸ் இணையத்தளத்தின் வாத்தின் படி, மக்கள் தாம் தாபித்த அரசாங்கங்கள் தம்சார்பில் முடிவுகளை மேற்கொள்ளும் போது அல்லது அத்தகைய முடிவுகள் அவர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் போது மக்கள் அத்தகைய முடிவுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு உரிமையுடையவர்கள் (Right to know). அந்தவகையிலேயே எமது நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் சர்வதேச அளவிலான உண்மைத் தகவல் இயந்திரமென்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 ஜூலியன் பவுல் அசான்ச் என்பவரால் இவ்விகிலீக்ஸ்  ஸ்தாபிக்கப்பட்டது. இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 1971 ஆம் ஆண்டு பிறந்தார். 

இவர் இவ்விணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.  அசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்தது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அசான்ச், இது விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறினார். இருப்பினும் 2010 டிசம்பர் 7ஆம் திகதி இவர் இலண்டனில் போலீசாரிடம் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார். டிசம்பர் 14 ,2010 அன்று இவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும் இரண்டு நாள் கழித்தே 16 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 


அண்மையில் இடம்பெற்ற லண்டன் செய்தியாளர் மாநாட்டில் விமர்சகர்களால் “உலகின் மிகவும் அபாயகரமான மனிதர்களில் ஒருவர்” என வர்ணிக்கப்படும் விகிலீக்ஸ் இன் தாபகர் ஜூலியன் அஸ்ஸேன்ஜ் கலந்துகொண்டார். இவரின் ஆதரவாளர்கள் இவரை ஒரு வீரனாக நோக்குகின்றனர்.


மேலும் இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார். 

விக்கிலீக்ஸின் வலைத்தள வழங்கன் முதல் முதலாக விகிலீக்சானது நெறிமுறையில்லாத செயற்பாடுகளுக்கு  சுவடுகள் இல்லாமல் போன விபரக் கொத்துகளை கசியவிட்டுள்ளது. ("an uncensorable system for untraceable mass document leaking") இதன் மூலம் உலகப் பிரசித்தி பெற்ற இணையத்தளமாகும். இது பல்வேறுபட்ட இணையப்பெயரில் உலகம்பூராக 8000  கும் மேற்பட்ட இணையத்தளங்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் 2006 ல் இருந்து ஆகஸ்ட் 2010 வரைக்கும் சுவீடன் நாட்டின் PRQ எனும் கணனி வலைத்தள வழங்கனில் (PeRiQuito AB (PRQ) is a Swedish Internet service provider) இயங்கி வந்தது தற்போது அதே நாட்டின்   பஹ்ன்கொப் (Bahnhof) கணனி வலைத்தள வழங்கனில் இயங்கி வந்துகொண்டிருக்கின்றது.

Bahnhof கணனி வலைத்தள வழங்கன்
2ஆம் உலக மகாயுத்தத்தின் போது அணு ஆயுத குகையாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் பஹ்ன்கொப் (Bahnhof) கணனி வலைத்தள வழங்கன் அமைக்கப்பட்டுள்ளது. இது சுவீடனில் ஸ்டாக்கோல்ம் (Stockholm) எனும் இடத்தில் உள்ளது. இது 30m ஆழத்தில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான 1.64m தடிப்புக் கொண்ட இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளது. இதை பாரிய ஆயுதங்களால் தாக்கியழிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 





















































அண்மையில் ‘விகிலீக்ஸ்’ என்ற இணைய உளவறிக்கையிடல் நிறுவனம் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தகவல்களை உள்ளடக்கிய 90000ற்கும் மேற்பட்ட ஆவணங்களை வெளியிட்டது. இவ் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ வரலாற்றிலேயே மிகப்பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ இரகசிய தகவல்கள் கசிவுறுவதென்பது மிகவும் அறிதானதும் சாத்தியமற்றதுமாகும். அந்நிலையில் ‘விகிலீக்ஸ்’ ஆல் வெளியிடப்பட்ட தகவல் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ தகவல்களின் இரகசியத்தன்மைக்கு ஏற்பட்ட பாரிய இடி என்றே கொள்ளப்பட வேண்டும்.


அமெரிக்க அதிகாரிகள் இவ் இராணுவ இரகசிய தகவல் கசிவு தொடர்பில் அஸ்ஸேன்ஜ் உடன் பேசுவதற்கு விரும்புவதாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் எப்போதும் இவ்வாறு பேச்சுகள் நடத்துவதற்கு விரும்புவதில்லை எனவும் இவற்றிலிருந்து நழுவித் தப்பித்துக்கொள்ளக்கூடியவர் எனவும் அவுஸ்திரேலிய பத்திரிகையாகளர் அன்ரு fபௌலர் தெரிவத்துள்ளார்.
  

இவ் இரகசிய ஆவணங்கள் தொடர்பிலான பல்வேறு உண்மைகள் வரைவில் வெளிவரலாம். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை இத்தகைய அதி இரகசியத்தன்மைவாய்ந்த இராணுவ தகவல்கள் எவ்வாறு விகிலீக்ஸ் க்கு பரிமாறப்பட்டது என்பது முக்கிய வினாவாக அமைந்துள்ளது என அல்-ஜெஸீரா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கங்களும் வர்த்தக நிறுவனங்களும் தமது உள்ளாந்த செயற்பாடுகள் தொர்பான இரகசிய தகவல்களை கசிவுறாமல் பாதுகாப்பதென்பது அவற்றின் மிகப் பிரதான நடவடிக்கையாகும். 


விக்கிலீக்சும் (விக்கிக்கசிவுகள்) அதன் இன்றைய தேவைகளும்.

உலக வல்லரசுகளாலும் பெரும் பண முதலாளிகளினாலும்  மேற்கொள்ளப்படுகின்ற பாரிய ஊடகப்போரின் மத்தியில் வளர்ந்து வரும் நாடுகளில் வாழ்கின்ற மக்கள் பெரிதும் பாதிப்படைந்த  நிலையில் இப்படியான உண்மைத்தன்மைவாய்ந்த ஊடகங்கள் விரல் விட்டு எண்ணக்கூடியதாகவே உள்ளது.


இதில் ஊடகப் போர் என்பது உலக வல்லரசுகள் என்று சொல்லப்படும் நாடுகள் தங்களின் சுயலாபத்துக்காகவும் தங்களின் ஆதிக்கத்தை நிலை  நாட்டவும் சில ஊடக நிருவனங்களைப் பயன்படுத்துவதும் ஊடகங்களுக்கு பொய்யான செய்திகளை வழங்குவதும் சுதந்திரமான ஊடகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்றே கூறலாம்.
உதாரணமாக அமெரிக்க ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக முதல் முதல் அறிவித்த போது வெளியிட்ட ஒசாமா பின்லேடனின் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியில் இது போடோஷோப் மென்பொருளால் செய்யப்பட்டது என நிரூபிக்கப்பட்டது. 


1998 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்ட பின்லேடனின் புகைப்படத்யும் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட

இவைகளில் காணப்படும் ஒற்றுமைகளையும் காணக்கூடியதாக உள்ளது. பின்லேடன் இறந்தரோ இல்லையோ என்பது ஒருபுறம் இருக்க அமெரிக்காவினால் முதல் முதல் ஊடகங்களுக்கு வெளியிட்ட புகைப்படம் பொய்யென நிரூபிக்கப்பட்டதானது ஊடகத்தின் உண்மைதன்மைக்கு ஏற்பட்ட பாதிப்பு என்றே சொல்லவேண்டும். அமெரிக்கா போன்ற வல்லரசுகள் தங்களை ஒரு உலக நாயகனாக காட்டிக் கொள்ளுவதற்காக உலகின் மிக அதிகமான ஊடக சாதனங்களை தனது கட்டுப் பாட்டில் வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. மேலும் அமெரிக்கா  கடைப்பிடிக்கின்ற தனது தூதரகங்களுக்கிடையிலான இரகசியத் தொடர்பு (Diplomatic Secrets Cable) என்பது மக்களுக்கோ ஏனைய அரசுகளுக்கோ தெரியாத மேற்கொள்ளப்படுகின்றன. இச்செயற்பாடானது பல அரசுகளால் பிழையான செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்கோ ஏனையவர்களுக்கோ தெரியாமல் சில ரகசியங்களை பேணுவதானது பலரின் விமர்சனத்துக்கு உள்ளான ஓன்று என்றே கூறலாம். இப்படியான செற்பாடுகளை அவர்களின் வலைத்தள வளங்கனின் உள் சென்று அவற்றின் இரகசியங்களை கைப்பற்றி அவற்றை மக்களின் பார்வைக்காக வெளியிட்டது விகிலீக்ஸ் எனும் உழவுத்தளமாகும். விகிலீக்சின் இச்செயற்பாடானது ஊடகங்களின் உண்மைத் தன்மைக்கு ஏற்பட்ட புத்துதுணர்ச்சி என்றே சொல்லலாம்.


மேலும் இந்திய கருப்பண விவகாரம்
 இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ..பி. எஸ் அதிகாரிகள், பொழுதுபோக்கு இண்டஸ்ட்ரியைச் சேர்ந்த சினிமாகாரர்கள், பைனான்சியர்கள், விளையாட்டு வீரர்களும் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ள கணக்கில் வராத கறுப்புப் பணம் குறித்த விவரங்களை விக்கிலீக்ஸ் வெளியிடப்போவதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ‘‘இந்தியாவிலிருந்து சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் ஜெர்மனி, சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. முதலீடு செய்தவர்களின் விவரங்களை இந்திய அரசு வெளியிடவேண்டும்’’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து மத்திய அரசு, சிலரது பெயர்கள் அடங்கிய பட்டியலை உச்ச நீதிமன்றத்துக்கு சீல் இடப்பட்ட கவரில் கொடுத்து, ‘இவற்றை வெளியிட்டால் இந்தியாவின் இமேஜுக்கு ஆபத்து வர வாய்ப்புள்ளது. எனவே பெயர்களை வெளியிடவேண்டாம்என்று கேட்டுக்கொண்டது.

இந்தியாவில்  காணப்படும் ஊடகங்கள் 98% வீதமானவை பணத்துக்காக செய்தி வெளியிடும் கூட்டங்கலாகவே காணப்படுகின்றன. இப்படியான ஊடக சாதனங்களால் அக்குறிப்பிட்ட நாடுகளுக்கு நன்மை இன்றி தீமையே கூடுதலாக காணப்படும். அந்தவகையில் இந்திய கருப்பண விவகாரம் இந்திய ஊடகங்களுக்கு தெரியாமல் இல்லை ஆனால் இவைகள் மூடி மறைக்கப்படுகின்றன. 

ஆகவே விகிலீக்ஸ் போன்ற உண்மைத்தன்மை வாய்ந்த ஊடகங்கள் எதிர்கால சமுதாயத்துக்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. அந்தவகையில் எதிர்கால உலகம் ஊடகங்களின் உண்மைத்தன்மையிலேயே தன்கயுள்ள்ளது. என்றே கூறலாம்.

கருத்துகள் இல்லை: